அங்காடிகளில் குவிந்த மக்கள் : ஊரடங்கு செய்தி எதிரொலி?

பிரான்சு தலைநகர் பாரீசில் தொடர்ந்து உயர்ந்துவரும் கொரோனா நோய்தொற்றினால் விரைவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்ற செய்தி பரவியதால் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்க அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில், தமிழ் கடைகளில் மக்கள் குழுமி வருகின்றனர்.

பிரான்சில் தற்போது வரை கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5423 என பிரான்சின் சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை (06/03/2020) முதல் பள்ளிகள் மறு உத்தரவு வரும்வரை மூடப்படுவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன் பொதுமக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். பல்வேறு துறையினருக்கும் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் சில துறைகளில் பணியாற்றுவோருக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க பிரான்சில் எந்நேரமும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்ற செய்தி பரவியதால் பிரான்சின் தலைநகர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள புறநகர்களில் வசிக்கும் மக்கள் பொருட்களை வாங்க அங்காடிகளில் குவியத்துவங்கினர். பேரங்காடிகளான கர்ஃபூர் (Carrefour), லிடில் (Lidl), lலீடர் பிரைஸ் (Leader Price), அல்தி (Aldi) போன்ற கடைகளில் நீண்ட வரிசையில் மக்கள் நின்று பொருட்களை வாங்கிச்சென்றனர். அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, சமையல் எண்ணெய், பாஸ்தா, முட்டை உள்ளிட்ட உணவு பொருட்கள் பெருமளவில் வாங்கிச்செல்வதால் சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில தமிழ் கடைகளிலும் அரிசியை முன்பதிவு செய்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மூடப்படாது என்று சொல்லப்பட்டாலும் மக்கள் பொருட்களை வாங்கத் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

What's your reaction?
Show CommentsClose Comments

Leave a comment