கீழடி அகழாய்வில் வெள்ளி நாணயம் கண்டுபிடிப்பு!

மதுரை நகருக்கு அருகில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி அகழாய்வுத் தளத்தில் தற்போது ஏழாவது கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.

இந்த அகழாய்வில் வெள்ளியிலான முத்திரை பதிக்கப்பட்ட நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சூரியன், சந்திரன், எருது, காளை, நாய், ‘ட’ வடிவ குறியீடுகள் காணப்படுகின்றன.

2.20 gm எடையுடைய இந்த நாணயம் கீழடி அகழாய்வு பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ. ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

இந்நாணயங்களின் காலம் மௌரியர்களின் காலத்தை ஒட்டியது என சொல்லப்பட்டாலும் மகத நாட்டின் சிசுநாக (shaisunaga dynasty) வம்ச நாணயங்களின் அமைப்போடு ஒத்துப்போகின்றன. சிசுநாக வம்சத்தின் காலம் பொ.ஆ.மு. (BCE) 421 – 345 BCE ஆகும்.

கீழடியில் நடந்த அகழாய்வில் இதற்கு முன்பாக பழமையான வீரராயன் தங்க பணம், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரிய நாணயம், ரோமானிய நாணயங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

What's your reaction?
Show CommentsClose Comments

Leave a comment