‘விளம்பி’யது விரைந்து விழி மலரும்
உளமதில் உள்ள குறை யகலும்
வலம் வந்து வண்டமிழ் மொழிபேசி
குலமகளே! நலம்பயக்க வா!மகளே!
ஒருமைபட்டு ஓரினமாய் ஒளிர்ந்து வா!
வெறுமையில் வெந்து விடும் வேற்றினமே!
வறுமையை வாளெடுத்து வீழ்த்தி விடு
நன்னீராம் காவேரித்தாயை வாழ்த்திபாடு!
சிறப்பு சிந்தை சிறகு விரித்து
சிறந்து வருக! சித்திரை மகளே!
விரும்பிய தெல்லாம் அரும்பும் ஆண்டு
‘விளம்பி’யது கைக் கூடும் நீ! வேண்டு!
இனியவராய் மாந்தர் மங்காத மகிழ்வோடு இன்புறவே இனிக்கட்டும் இவ்வாண்டு!