பிரான்சில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நடிகர் கமல்ஹாசன் நற்பணி மன்றத்திற்கு விருது வழங்கி பாராட்டியுள்ளது இந்திய தூதரகம்.
இந்தியாவின் 74வது சுதந்திர தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளிலும் அந்நாடுகளின் இந்திய தூதரகங்களில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீசிலுள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்வில், பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறையில் சாதனை, சேவை புரிந்தோருக்கான சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
கொரோனா துயரில் உலக நாடுகளே திணறி கொண்டிருக்கும் வேளையில், பிரான்சில் உணவின்றி தவித்த பலருக்கு உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி கவனத்தை ஈர்த்த கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் சேவையை பாராட்டி பிரான்சுக்கான இந்திய தூதர் ஜாவித் அஷ்ரப் அவ்வமைப்பின் தலைவர் பிரான்சுவா கஸ்தோனுக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.
இது குறித்து அமைப்பின் தலைவர் பிரான்சுவா கஸ்தோன் வணக்கம் பிரான்சு தளத்திற்கு அளித்த பேட்டியில் ‘இந்த விருதினை கோவிட் தொற்றின் சிக்கலான சூழலிலும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய எங்கள் அமைப்பின் உறுப்பினர் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றேன். கோவிட் ஊரடங்கினால் பாரீசில் உணவு கிடைக்காமல் அல்லலுற்ற மக்களுக்கு உதவிகள் செய்த அனைவருக்கும் நன்றிகள் கூட கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, திரு.ஞான ஸ்டீபன், திரு. ஜூட் சோழனார், திரு. எரிக் லார்ண், திரு. பிரபாகர் சாமிக்கண்ணு, திரு. தனஞ்செயன் தனபாண்டியன், திரு. பெர்னாண் கஸ்தோன், திரு. சன்யாஸ் பக்தா போன்றோர் சிறப்பாக பணியாற்றினர். எங்களுக்கு உறுதுணையாக இருந்த திரு. அதிசயம் வேதமுத்து (GFT France), திரு. பிர்தவுஸ் (சங்கீதா ரெஸ்டாரண்ட், பாரீஸ்), திரு. சந்திரசேகர் பரசுராமன், திரு. ஜெய்ஸ் உள்ளிட்ட அனைவருக்கும், பொருளாதார உதவிகள் செய்தவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விருதை கொடுத்து எங்களை மென்மேலும் ஊக்கப்படுத்திய பிரான்சுக்கான இந்திய தூதரகத்துக்கு எங்கள் அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!’ என்று குறிப்பிட்டார்.
இதைப்பற்றி தமிழக ஊடகத்தில் வெளிவந்துள்ள செய்தி :
https://ns7.tv/ta/tamil-news/world/16/8/2020/kamal-haasan-charity-forum-award-france