ஐரோப்பிய நாடான பிரான்சில் வருகின்ற மார்ச் 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அதன் அனைத்து மாநிலங்களிலும் நகரசபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றுபெறுபவர்கள் மேயர் (நகரத்தந்தை) மற்றும் கோன்சியே முனிசிபல் (Conseiller municipal) உள்ளிட்ட நகரசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
பிரான்சின் இல் தே பிரான்ஸ் (IL de France) மாநிலத்தில் 95 மாவட்டங்கள் உள்ளன. அதில் பெரும்பான்மை மாவட்டங்களில் பிரான்சு வாழ் தமிழர்கள் பலர் போட்டியிடுகின்றனர். குறிப்பாக செய்ன் சான் தெனி (Seine saint denis) மாவட்டத்தின் லா குர்நேவ் (La Courneuve) நகரசபைக்கு புதுவை காரைக்காலை சேர்ந்த அமிர்தீன் பரூக் எனும் தமிழர் மேயருக்காக போட்டியிடுகின்றார்.அது மட்டுமல்லாமல் லெ புர்ஜே (Le Bourget), லீல் சான் தெனி (L’Ile-Saint-Denis), ஒபேர்வில்லியே (Aubervilliers), கிளிஷி சுபுவா (Clichy-Sous-Bois), நோசி லெ செக் (Noisy-Le-Sec), பியர்பித் சுர்செய்ன் (Pierrefitte-Sur-Seine), ஸ்தான் (Staines), வில்பான்த் (Villepinte), துனி (Dugny), எபினே சுர்செய்ன் (Epinay-Sur-Seine), திரான்சி (Drancy), வில்லியேலெபல் (Villiers le bel), பொபினி (Bobigny), செவ்ரான் (Sevran), கனி (Gagny), நோசி லெ கிரான் (Noisy-Le-Grand), வில்நேவ் ல கரேன் (Villeneuve la garenne) உள்ளிட்ட பல நகரசபைகளில் தமிழர்கள் நகரசபை உறுப்பினர் மற்றும் துணை நகரசபை தலைவர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
– பிரான்சுத் தமிழ் சிறப்பு செய்திப்பிரிவு
- டி.எம்.கிருஷ்ணா ஏன் எரிச்சலூட்டுகிறார் ? - March 30, 2024
- பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 54ஆவது பொங்கல் விழா! - February 21, 2024
- புகைப்பட பக்கம்: திரு.கருணாகரன் கோவிந்தராஜ் - November 10, 2023