பிரான்சிலுள்ள ஒல்னே-சுபாவில் (Aulnay-sous-bois) ஒல்னே இந்திய சங்கத்தின் (AIA) சார்பில் தீபாவளி கொண்டாட்டமும், அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவும் கடந்த சனிக்கிழமை (04/11/2023) அன்று விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் ஒல்னே நகர மேயர் திரு. புருனோ பெசிசா (Bruno Beschizza), இந்திய தூதரகம் சார்பாக செயலர் திரு. K.G பிரவீன் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவின் துவக்கத்தில் இந்திய கலாச்சாரப்படி குத்து விளக்கு ஏற்றப்பட்டது. தமிழ் தாய் வாழ்த்துப் பாடலைத் தொடர்ந்து, ஒல்னே இந்திய சங்கத்தின் தலைவர் திரு. இராஜன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஒல்னே நகர மேயர் மற்றும் இந்திய தூதரக செயலர் சிறப்புரையாற்றினர்.
பாரிஸ் வானம்பாடிகள் இசைக்குழுவினரின் இன்னிசை கச்சேரியும், Firebirds கலைக்குழுவினரின் குழு நடனம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரான்ஸ் சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ப்ரித்திகா கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியை திரு.கமல்ராஜ் ரூவியே தொகுத்து வழங்கினார்.
விழாவில் கலந்துக்கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
பல்வேறு வர்த்தகர்களுடன் வர்த்தக கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் பிரான்சைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர்.
விழாவின் முடிவில் ஒல்னே இந்திய அமைப்பின் செயலாளர் திரு. பாலா வாசு, துணை தலைவர் திரு. குமார் ஆகியோர் நன்றி கூறினர். விழா ஏற்பாடுகளை அமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரான்ஸ் வாழ் தமிழர்கள் கலந்துகொண்டனர்.
via