பிரான்சில் கொரோனா வைரசின் அறிகுறி மீண்டும் மிகுந்த அளவில் தென்படுவது கவலை அளிக்கிறது என பிரெஞ்சு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. பிரான்சில் கோவிட் தொற்றுநோய் குறித்த தினசரி அறிக்கை மற்றும் பொது சுகாதார பிரான்ஸ் மற்றும் சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் இதை உறுதிப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.
தூய்மைக்கேடு
இந்த புதன்கிழமை, நவம்பர் 10 அன்று மட்டும் 24 மணி நேரத்தில் 11,883 புதிய கோவிட் – 19 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரான்சின் பொது சுகாதார துறை புள்ளி விவரங்களின்படி, கோவிட் பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தம் 7,244,040 வழக்குகள் பதிவுசெய்யப்படுத்தப்பட்டுள்ளன.
சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றின் விகிதம் 3.1% ஆக உயர்ந்திருக்கிறது. இது முந்தைய நாள் 3% ஆக இருந்தது.
மருத்துவமனையில்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 6,906 (24 மணி நேரத்தில் +55) ஆக உள்ளது, இதில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் 1,154 (24 மணி நேரத்தில் +8) பேரின் எண்ணிக்கையும் அடங்கும்.
மரணங்கள்
24 மணி நேரத்தில், 33 பேர் மருத்துவமனையில் கோவிட் காரணமாக இறந்துள்ளனர். கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 118,056 ஆக உள்ளது, இதில் மருத்துவமனையில் 91,159 பேர் இறந்துள்ளனர்.
தடுப்பூசி
பிரான்சில் தடுப்பூசி பரப்புரை தொடங்கியதிலிருந்து, 51,431,090 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
- டி.எம்.கிருஷ்ணா ஏன் எரிச்சலூட்டுகிறார் ? - March 30, 2024
- பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 54ஆவது பொங்கல் விழா! - February 21, 2024
- புகைப்பட பக்கம்: திரு.கருணாகரன் கோவிந்தராஜ் - November 10, 2023