புதுச்சேரியைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் திரு. நித்தி ஆனந்த். இவரின் புகைப்படங்கள் அழகிலும் நயத்திலும் அசத்துகின்றன. இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.
இவர் புதுவையை பூர்வீகமாக கொண்டவர். வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்சமயம் பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறார். சிறுவயதிலிருந்தே அவரது தாய் மாமா எடுக்கும் புகைப்படங்களை பார்த்து புகைப்படக்கலையில் இவருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இவரது ஆர்வத்தை பார்த்த இவரது மாமா இவருக்கு புகைப்படம் எடுப்பது எப்படி என அவரது கேமராவிலே கற்றுக்கொடுத்துள்ளார். அதன் பின்னர் படிப்பு முடித்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்றதும், 2010 ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக அவரது மாமா ஒரு கேனான் கேமரா பரிசளித்தார். அதோடு, அவரை பல ஐரோப்பிய நகரங்களுக்கு அழைத்துச் செல்ல, அப்பயணத்திலிருந்தே தனது புகைப்படப் பயணத்தை தொடர்ந்திருக்கிறார் நித்தி ஆனந்த்.
என்ன தான் அயல்நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், இந்தியா வந்து இங்கே கிராமம் கிராமமாக சென்று ஏழை எளிய மக்களை படம் பிடிக்க விரும்புகிறார் நித்தி ஆனந்த். தனது ஒவ்வொரு இந்திய பயணத்தின் போதும் கிராமங்களுக்கு சென்று படம்பிடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதோடு, தனது படங்களை பிளிக்கர் இணையதளத்திலும் பதிவிட்டு வருகிறார். இதை விட சிறந்ததொரு விடயம், இவர் தான் எடுக்கும் படங்களை ஒருபோதும் விற்பனை செய்ததில்லை. படமெடுப்பது தனது ஆத்ம திருப்திக்காகவேயன்றி விலைக்காக அல்ல என்று கூறும் இவர், நல்ல காரியங்களுக்காக இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறுகிறார்.
இன்று வரை இவர் எடுத்த பல படங்கள் Wikipedia, commonwealth, Radio France போன்ற பல்வேறு இணையதளங்களில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சில புகைப்படங்கள் ஆராய்ச்சி கட்டுரைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அவரது புகைப்படங்களில் சில :
இவரின் புகைப்பட தொகுப்பினை இங்கு காணலாம்.
https://www.flickr.com/photos/nithiclicks/
- டி.எம்.கிருஷ்ணா ஏன் எரிச்சலூட்டுகிறார் ? - March 30, 2024
- பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 54ஆவது பொங்கல் விழா! - February 21, 2024
- புகைப்பட பக்கம்: திரு.கருணாகரன் கோவிந்தராஜ் - November 10, 2023
2 Comments
Gopal
Very good
Karunakaran
Superb Editorial Post… Nice profile….. Wonderful thought about Vanakkamfrance. fr