பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழா பிரான்சில் நடைபெற்றது.
[URIS id=1072]
பிரான்சின் தலைநகரம் பாரீசுக்கு அடுத்துள்ள மலகோப் (Malakoff) நகரத்தில் பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 53 ஆவது ஆண்டு பொங்கல் விழா 15.01.2023 அன்று நடைபெற்றது. பிரான்ஸ் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் திரு.பா.தசரதன் அனைவரையும் வரவேற்றார். பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. கோகுலன் கருணாகரன் விழாவிற்கு தலைமை தாங்கினார், பிரான்ஸ் தமிழ் சங்க துணைத்தலைவர் திரு.தளிஞ்சன் முருகையன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மலகோப் நகர மன்ற தாய் திருமதி. ஜக்குலின் பெலோம் உரையாற்றினார். மேலும், திரான்சி நகர மன்ற உறுப்பினர் திரு.அலன் ஆனந்தன், திரு. பிரபாகரன், சித்தாரா அமைப்பின் தலைவர் திரு. தம்புசாமி கிருஷ்ணராஜ், பாவலர் அருணா செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு உரையாற்றினர். திரு.தளிஞ்சன் முருகையன் பொங்கலை பற்றி சிறப்புரையாற்றினார். பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பிரான்சில் வாழும் தமிழ் மக்களும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக, பிரான்ஸ் தமிழ்ச்சங்கத்தின் துணைப்பொருளாளர் திருமதி. எலிசபெத் அமல்ராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
- டி.எம்.கிருஷ்ணா ஏன் எரிச்சலூட்டுகிறார் ? - March 30, 2024
- பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 54ஆவது பொங்கல் விழா! - February 21, 2024
- புகைப்பட பக்கம்: திரு.கருணாகரன் கோவிந்தராஜ் - November 10, 2023