அதிக மது பயன்பாட்டை கட்டுப்படுத்த கூடுதல் வரி : பிரான்ஸ் அரசு முடிவு

வருகின்ற இலையுதிர் கால கூட்டத்தொடரில் கேடு விளைவிக்கும் மது பயன்பாட்டை குறைக்கும் விதமாக கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதிகளவு மது பயன்பாட்டினை தடுக்க மது மீதான வரிகளை உயர்த்த நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதற்கான தயாரிப்புகளை வரும் நாட்களில் துவங்க உள்ளதாகவும், வருகின்ற இலையுதிர் கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

கடந்த ஆண்டு புகையிலை பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு, கடந்த மே மாதம் முதல் விலையேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த கூடுதல் வரியினால் சில காசுகளே விலை கூடும் எனவும் கூறப்படுகிறது.

துறை சார் வல்லுநர்கள் இந்த விலையுயர்வு குறித்து கவலை தெரிவித்துள்ளதோடு, குறைந்தது ஒன்று அல்லது இரண்டு யூரோக்கள் விலையேற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். 10 சதவிகிதம் விலை உயர்வு விதிக்கப்பட்டால் தான் 19 யூரோக்கள் மதிப்புள்ள மதுவின் விலை வரிகளெல்லாம் சேர்த்து 1.70 யூரோக்கள் கூடும் என பிரெஞ்சு ஊடகம் தெரிவித்துள்ளது.

‘அதிகளவு மது பயன்பாட்டினை குறைப்பதற்காக அன்றி, நாங்கள் குறிப்பிட்ட துறையை எதிர்ப்பதற்காக இந்த முடிவினை எடுக்கவில்லை’ என்று நலத்துறை அமைச்சர் பிரான்சுவா ப்ரான் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த விலையுயர்வு பாரம்பரியமிக்க ஒயின் மரபினை பாதிக்கும் எனதொழிற்சங்க தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஒருவேளை இந்த வரி விதிக்கப்பட்டால் அரசின் வருவாய் சில நூறு மில்லியன் யூரோக்கள் கூடும் என்று கூறப்படுகிறது.

What's your reaction?
Show CommentsClose Comments

Leave a comment