பிரான்சில் பத்தாண்டுகளில் கணிசமாக உயர்ந்த பொருளாதார இழப்பு விகிதம் !

விலைவாசி உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்காமல் – பயன்படுத்தாமல் தவிர்க்கும் இழப்பின் விகிதம் உயர்ந்துள்ளது.

பணப்பொருளாதாரத்தின் அடிப்படையில் வறுமை விகித்தை கணக்கிடுவது போல அத்திவாசிய பொருட்களை மக்கள் வாங்கி பயன்படுத்ஹ்டாமல் தவிர்ப்பதன் அடிப்படையில் இந்த இழப்பு விகிதம் கணக்கிடப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, தேவையான உணவு, போதுமான உடைகளை வாங்குவது, விடுமுறைக்கு ஆண்டுதோறும் செல்வது, சில சேவைகளை பயன்படுத்துவது உள்ளிட்டவை அடங்கும்.

இந்த இழப்பு பிரான்சிலுள்ள மக்கள் தொகையல் 14 விழுக்காடு மக்களை பாதித்துள்ளாதாக INSEE தெரிவித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு 12.4% விழுக்காடாக இருந்தது தற்போது 14% ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் எரியாற்றல் (energy) தான் எனக்கூறப்படுகிறது. 10.2% குடும்பங்கள் தங்கள் வீடுகளை போதுமான அளவு சூடுபடுத்த இயலவில்லை என்று கூறுகின்றனர். 2018-ஆம் ஆண்டு இதன் அளவு 5% விழுக்காடாக இருந்தது. ஏழை, எளிய குடும்பங்கள் மற்றவர்களை விட அதிகமாக பயன்படுத்தும் வெப்பமேற்றிகளில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் விலை அதிகரித்ததும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக INSEE தெரிவித்துள்ளது.

இந்த ‘இழப்பு’ விகிதம் INSEE தயாரித்துள்ள 13 வகைகளிலிருந்து மக்கள் ஐந்து பிரிவுகளில் தேர்வு செய்பவனவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

குழந்தைகள் இல்லாத இணையர்களிடம் 6.8% விழுக்காடுகளையும், தனியாக இருப்பவர்களிடம் 15.8% விழுக்காடுகளையும், தனி நபர் பெற்றோருள்ள குடும்பங்களில் 31.1% விழுக்காடுகளையும் இழப்பு விகிதம் அடைந்துள்ளது.

ஐரோப்பாவின் சராசரி இழப்பு விகிதமான 12.7% எனுமளவை பிரான்ஸ் நெருங்கி வருகிறது. மற்ற ஐரோப்பிய நாடுகளில் இழப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. ஜெர்மனியில் 11.5%-ம், இத்தாலியில் 9%-ம், லக்சம்பர்க்கில் 5%-ம் உள்ளது.

2020 ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் சராசரி வாழ்க்கை வருமானத்தில் 60% க்கும் குறைவான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட குடும்பங்களின் பண வறுமை விகித அளவு 14.6% எட்டியள்ளதாக INSEE கூறியுள்ளது.

What's your reaction?
Show CommentsClose Comments

Leave a comment